Friday 3rd of May 2024 03:57:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

யுவன் இசையமைத்த இந்த படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் இயக்குனரின் தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீ்ட்டை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் முதல் பாடலை ஜூன் 21 ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE